நெல்லையப்பர் கோவில் கோவிந்தர் சன்னதியில் கும்பாபிஷேகம்


நெல்லையப்பர் கோவில் கோவிந்தர் சன்னதியில் கும்பாபிஷேகம்
x

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் கோவிந்தர் சன்னதியில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில், நெல்லையப்பர் சன்னதி அருகில் நெல்லை கோவிந்தர் சன்னதியும் அமைந்துள்ளது. அங்கு அவர் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நெல்லை கோவிந்தர் சன்னதி பராமரிப்பு பணிக்காக, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் தொடங்கியது. நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நெல்லையப்பருக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஹோம பூஜை நடத்தி, நெல்லை கோவிந்தருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story