காமாட்சி சமேத கைலாசநாத சாமி கோவில் கும்பாபிஷேகம்


காமாட்சி சமேத கைலாசநாத சாமி கோவில் கும்பாபிஷேகம்
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் காட்ரம்பாக்கம் காமாட்சி சமேத கைலாசநாத சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் காட்ரம்பாக்கம் கிராமத்தில் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சிவாலயம் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டது. நந்தி, பல்லவர் கால சிற்ப பாணியில் அமைந்த பாலமுருகன் உருவச்சிலை காணப்பட்டது. இதை தொடர்ந்து காட்ரம்பாக்கம் ஊர் நாட்டாண்மைக்காரர் டாக்டர் ஆர். ஜானகிராமன் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து காருண்ய காமாட்சி சமேத கைலாசநாத சாமி கோவிலை புதிதாக கட்டி கற்பக விநாயகர், பாலமுருகன், காருண்யா காமாட்சி அம்மன், கைலாசநாதர், சண்டிகேஸ்வரர், பைரவர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, நந்தி பலிபீடம் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு 3 நிலை கொண்ட கருவறை விமானம் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி 3 நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நாட்டாண்மைக்காரர் டாக்டர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் காட்ரம்பாக்கம் கிராம மக்கள் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story