காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்


ராமநாதபுரத்தில் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நீலகண்டி ஊரணி மேல் கரையில் அமைந்துள்ள தொன்னை குருசாமி சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட, 300ஆண்டுகள் பழமையான காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 30-ந் தேதி கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. 2 நாட்கள் மூன்றுகால யாகபூஜைகள் நடைபெற்றன. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்கள் வேத விற்பன்னர்கள் மூலமாக ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்து வந்தனர். மூலஸ்தானம், ராஜ கோபுரம், பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் வேத மந்திரம் முழங்க சிவாய நம மந்திரம் ஒலிக்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

1 More update

Related Tags :
Next Story