ரேணுகாதேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


ரேணுகாதேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

மூங்கில்துறைப்பட்டு அருகே ரேணுகாதேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரேணுகாதேவி அம்மன் கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் முடிந்ததை அடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 11-ந்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் நேற்று முன்தினம் பூர்ணாஹூதி முடிந்ததை அடுத்து காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தெடர்ந்து கோவிலில் உள்ள மகாசக்தி மாரியம்மன், கங்கையம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story