செங்கழனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


செங்கழனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கழனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட மலையம்பாக்கம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கழனி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது ரூ.10 லட்சம் செலவில் விமானம், மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டது. அந்த பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் வீராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் டில்லி, துணை தலைவர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம், குன்னவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா, அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தேவராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மலையம்பாக்கம். ஜெகதீசன், ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், கிராம மக்களும் செய்திருந்தனர்.


Next Story