சொர்ணகாளீஸ்வரர், காளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
தேவகோட்டை அருகே முட்டக்குத்தி கிராமத்தில் உள்ள சொர்ணகாளீஸ்வரர், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே முட்டக்குத்தி கிராமத்தில் உள்ள சொர்ணகாளீஸ்வரர், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு நடந்த யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சொர்ணகாளீஸ்வரர் கோவில்
தேவகோட்டை அருகே சக்கந்தி ஊராட்சிக்குட்தேவகோட்டை அருகே முட்டக்குத்தி கிராமத்தில் உள்ள சொர்ணகாளீஸ்வரர், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு நடந்த யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பட்ட முட்டக்குத்தி கிராமத்தில் 1500 ஆண்டுகள் கால பழமை வாய்ந்த சொர்ணகாளீஸ்வரர், காளியம்மன், கருப்பர், மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் கொண்ட கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேக விழா நடக்கிறது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஷ்வரர்பூஜை, தனபூஜை, ஸ்தூபி ஸ்தானத்துடன் விழா தொடங்கியது.
நேற்று கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, புதிய விக்ரஹங்களுக்கு கண்திறத்தல் நிகழ்ச்சியும், மாலை பூர்வாங்க பூஜைகளும் நடைபெற்றது. முதற்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இரவு முதற்கால யாகபூஜையுடன் விழா தொடங்கி பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இந்த யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகம்
விழாவையொட்டி இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை மற்றும் நாடிசந்தானம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து கடம்புறம்பாடு நிகழ்ச்சியுடன் இன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சுவாமி, அம்பாள், கணபதி, முருகர், ஆஞ்சநேயகர், கருப்பர், நாகர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது.
கும்பாபிஷே விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மீது டிரோன் மூலம் பூக்களுடன் கூடிய புனிதநீர் தெளிக்கப்படுகிறது. விழாவில் மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவில் சுவாமிஜி ஸ்ரீமாதாஜி மற்றும் தேவகோட்டை ஜமீன்தாரும், திருப்பணி ஏ.எல்.ஏ.ஆர்.எஸ்.எம். நாராயண செட்டியார் உள்பட கிராம மக்கள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
சிறப்பு பஸ்கள்
இந்த விழாவையொட்டி ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டும், சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சியும் இன்று நடக்கிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக தேவகோட்டை பஸ் நிலையத்தில் இருந்து இன்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முட்டக்குத்தி கிராமத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை தேவகோட்டை கீழவீடு ஏ.ஆர்.லெட்சுமணன் செட்டியார் தலைமையில் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.