சாலையோரம் வீசப்படும் செத்த கோழிகள்


சாலையோரம் வீசப்படும் செத்த கோழிகள்
x
திருப்பூர்


குண்டடம் கோவை மெயின் ரோடு காக்காதோப்பு அருகே சாலை ஓரத்தில் செத்த கோழிகளை மர்ம ஆசாமிகள் மூடையாக கட்டி போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அந்த வழிய செல்ல முடியதளவில் துர்நாற்றம் வீசுகிறது. கோவை -மதுரை சாலை என்பதால் வாகனங்கள் அதிகளவில் செல்கின்றனர். இந்த நிலையில் செத்த கோழிகளை நாய்களும் ஆங்காகே கடித்து போடுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. செத்த கோழிகளை கொட்டிச்சென்ற மர்ம ஆசாமிகள் மீது சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story