நம்பியநாச்சியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
நம்பியநாச்சியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை
பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டியில் நம்பியநாச்சியம்மன் கோவிலில் ஆடி மாத குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் திரளான பெண்கள் குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து, அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி.கண்ணப்பன், பொன்னமராவதி பேரூர் கழக செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story