கவர நாயுடு சங்க செயற்குழு கூட்டம்
திருப்பூர்
உடுமலை, மடத்துக்குளம் கவர நாயுடு சங்க செயற்குழு கூட்டம் நேற்று உடுமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் எ.லோகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமதுரை திட்ட அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜெகநாதன் சங்க வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். பின்னர் அனைத்து கிளை நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை விரிவாக எடுத்து உரைத்தனர்.
எதிர்காலத்தில் சங்கத்தினை சிறப்பாக வழிநடத்த இளைஞரணி, மகளிரணி, நிர்வாகிகளை நியமித்திட செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் துணைத்தலைவர் துரைசாமி, இளைஞரணி வக்கீல் ஜெ.ராஜாராம் உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story