பகவதி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி
பகவதி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
நச்சலூர்,
கோவில் திருவிழா
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே நெய்தலூர் ஊராட்சி கட்டாணிமேட்டில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன், கருப்பசாமி, விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு திருவிழா நடத்துவதற்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து முக்கொம்பு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் மற்றும் பால்குடம் எடுத்து பகவதி அம்மன் கோவிலுக்கு மேளதாளத்துடன் பக்தர்கள் எடுத்து வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
குட்டி குடித்தல் நிகழ்ச்சி
முக்கிய நிகழ்வான கருப்பசாமி குட்டி குத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மருளாளி அருள் வந்து சாமி ஆடினார். பின்னர் ஊர் சார்பாக ஆட்டை வழங்கியதை கருப்பசாமி மருளாளி வாங்கி ஆட்டின் ரத்தத்தை உறிஞ்சி குடித்தார்.நேர்த்திக் கடனாக கொடுக்கப்பட்ட 3 ஆடுகளின் ரத்தத்தையும் குடித்தார். பின்னர் சுமார் 1 மணி நேரம் ஊர் மக்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதற்கான ஏற்பாட்டினை ஊர் நாட்டாமை மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.