கே.வி.குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
கே.வி.குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் என்.பாலா தலைமை தாங்கினார். இதில் 39 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற 31-ந் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பெருந்திரள் பேரணி செல்வது, பஞ்சாயத்து ராஜ் சட்ட உரிமை மீட்பு உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது அவர் ஊராட்சி மன்ற தலைவர்கள் வைத்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story