லா.கூடலூர் ஊராட்சியை 2 ஆக பிரிக்க வேண்டும்


லா.கூடலூர் ஊராட்சியை 2 ஆக பிரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Sep 2023 6:45 PM GMT (Updated: 4 Sep 2023 6:45 PM GMT)

லா.கூடலூர் ஊராட்சியை 2 ஆக பிரிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் கிராமமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

லா.கூடலூர் ஊராட்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட லா.கூடலூர் ஊராட்சியில் லாலாபேட்டை, லா.கூடலூர், மேலத்தேவனூர், கீழத்தேவனூர், சேரந்தாங்கள் ஆகிய 5 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் மொத்தம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.

இதில் கீழத்தேவனூரில் 2 ஆயிரம் பேர், மேலத்தேவனூரில் ஆயிரத்து 500 பேர், சேரன்தாங்களில் ஆயிரம் பேர் என மொத்தம் 4,500 மக்கள் உள்ளனர். இந்த 3 கிராமங்களை சோ்ந்த மக்கள் ஏதாவது அடிப்படை வசதிகள் தேவை என்றால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லா.கூடலூருக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தனி ஊராட்சியாக

மேலும் 3 கிராமங்களும் வளர்ச்சி பெறாமல் உள்ளது. எனவே லா.கூடலூர் ஊராட்சியை 2 ஆக பிரித்து இங்குள்ள கீழத்தேவனூர், மேலத்தேவனூர், சேரன்தாங்கள் ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக உருவாக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் தனி ஊராட்சியாக பிரிப்பது என கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் லா.கூடலூர் ஊராட்சியை 2 ஆக பிரிக்கக்கோரி 100-க்கு மேற்பட்ட கிராம மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story