சம வேலைக்கு சம ஊதியம் வழங்க ஆய்வக உதவியாளர்கள் வேண்டுகோள்


சம வேலைக்கு சம ஊதியம் வழங்க ஆய்வக உதவியாளர்கள் வேண்டுகோள்
x

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க ஆய்வக உதவியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராதிகா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் சங்கத்தின் மாநில தலைவர் அர்ஜூன், இணை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் ஆய்வக உதவியாளர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் பணி ஏற்ற நாள் முதல் பணி ஓய்வு பெறும் நாள் வரை ஆய்வக உதவியாளர் பணியிடம் பதவி உயர்வு இல்லாத பணியிடமாக உள்ளது. எனவே நேரடி எழுத்து தேர்வு மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்களுக்கு ஏற்கனவே 6-வது ஊதிய குழுவில் வழங்கப்பட்ட தேர்வு நிலையில் தர ஊதியம் ரூ.4,200 (நிலை 11), சிறப்பு நிலையில் தர ஊதியம் ரூ.4,400 (நிலை 13) ஆகியவை சம வேலைக்கு சம ஊதியம் என்பதின் அடிப்படையில் வழங்க வேண்டும். திருச்சியில் நடைபெறவுள்ள சங்கத்தின் முதல் மாநில மாநாடான ஒற்றை கோரிக்கை மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆய்வக உதவியாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story