மனைவியை தாக்கிய தொழிலாளி கைது


மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
x

சேரன்மாதேவி அருகே மனைவியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே உள்ள மேல சடையமான்குளம் சர்ச் தெருவை சேர்ந்த செலின் ராணி (36) என்பவருக்கும், தொழிலாளி உதயகுமார் (40) என்பவருக்கும் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் செலின்ராணி தன் குழந்தைகளின் துணிகளை எடுப்பதற்காக உதயகுமார் வீட்டிற்கு சென்றார். அப்போது செலின் ராணியை உதயகுமார் அவதூறாக பேசி கையால் தாக்கி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செலின்ராணி பத்தமடை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர்.

1 More update

Next Story