கோட்டூரில் மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

கோட்டூரில் மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
கோயம்புத்தூர்
கோட்டூர்
கோட்டூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது 29). இந்த நிலையில் கார்த்திகேயன் தினமும் மது குடித்து விட்டு செல்வியை தகாத வார்த்தையால் திட்டி கொடுமைப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் மகளிர் சுயஉதவிக்குழுவில் ரூ.37 ஆயிரம் கடன் பெற்று, அதை கொண்டு சில்லறை கடன்களை அடைப்பதற்கு வைத்திருந்ததார். இதை கார்த்தியேன் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து செல்வி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு சென்ற கார்த்திகேயன் பணத்தை தரக் கோரி மிரட்டி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






