ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருடிய தொழிலாளி கைது


ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருடிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருடிய தொழிலாளி கைது

கோயம்புத்தூர்

கோவை

கோவை நகைப்பட்டறையில் ரூ 7 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

நகை பட்டறை தொழிலாளி

கோவை கெம்பட்டி காலனி, எல்.ஜி. தோட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பு ராஜ் (வயது 44).தங்க நகைபட்டறை நடத்தி வருகிறார்.இவரது பட்டறையில் செல்வபுரம் தில்லைநகரை சேர்ந்த நாகராஜ் (38) என்பவர் நகை தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 13- ந்தேதி அன்று கருப்புராஜ் 120 கிராம் தங்க கட்டியை பட்டறை மேஜை டிராயரில் வைத்துவிட்டு வீட்டுக்கு சாப்பிட சென்றுள்ளார்.

ரூ.7 லட்சம் தங்கம்

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த தங்க கட்டியை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.இதன் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும். இதுகுறித்து கருப்பு ராஜ் பெரியகடைவீதி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா, சப் இன்ஸ்பெக்டர் பாமா ஆகியோர் வழக்கு பதிவு செய்து நகை தொழிலாளி நாகராஜை கைது செய்தனர். இவரிடமிருந்து 95 கிராம் தங்கம் மட்டும் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும். மீதம் உள்ள தங்கம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story