மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

சேலம் அருகே உள்ள வீராணம் பகுதியை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (வயது 50), கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மூத்த மகனுக்கு இன்னும் திருமணமாகாததால் காசி விஸ்வநாதன் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். மேலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கினார்.

இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காசி விஸ்வநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story