குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி
குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
குன்னூர்
குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொழிலாளி
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. மேலும் விவசாய பயிர்களுக்கும் பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்பா சத்திரம் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பழனிவேல் (வயது 70). தொழலாளி. இவரது மனைவி பழனியம்மாள். நேற்று பழனிவேல் அங்குள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்துகொண்டு இருந்தார்.
காட்டெருமை தாக்கியது
அப்போது அந்தப்பகுதியில் உள்ள புதர் அருகே இருந்து காட்டெருமை ஒன்று வேகமாக ஓடி வந்தது. திடீரென அந்த காட்டெருமை பழனிவேலை முட்டித்தள்ளி தாக்கியது. இதனால் அவர் நிலைதடுமாறி கீேழ விழுந்ததோடு படுகாயம் அடைந்தார். இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் பழனிவேலை மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் பழனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பழனிவேலின் உடல் பிரேத பரிசோதனைக்கு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து மேல் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.