லாரி மோதி தொழிலாளி சாவு


லாரி மோதி தொழிலாளி சாவு
x

பணகுடியில் லாரி மோதி தொழிலாளி இறந்தார்.

திருநெல்வேலி

பணகுடி:

வடலிவிளையை அடுத்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ராஜப்பன் மகன் பாலகிருஷ்ணன் (வயது 34), குருசாமி நாடார் மகன் கண்ணன் (34). இவர்கள் இருவரும் கூலி தொழிலாளர்கள். நேற்று மாலை வேலை முடிந்து பாலகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் கண்ணனை ஏற்றிக் கொண்டு வடலிவிளை ரோட்டில் வந்தார். அப்போது எதிரே வந்த மினி லாரி மோதியதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். கண்ணன் படுகாயம் அடைந்தார். அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேன் வழக்குப்பதிவு செய்து வடக்கன்குளத்தை சேர்ந்த மினி லாரி டிரைவர் மைக்கிள் டினோ (33) என்பவரை கைது செய்தார்.

1 More update

Next Story