தொழிலாளியை கொலை செய்து விட்டு தலைமறைவு: 8 ஆண்டுகளாக தேடப்பட்டவர் குஜராத்தில் சிக்கினார்


தொழிலாளியை கொலை செய்து விட்டு தலைமறைவு: 8 ஆண்டுகளாக தேடப்பட்டவர் குஜராத்தில் சிக்கினார்
x

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வடமாநில தொழிலாளியை கொலை செய்து விட்டு தலைமறைவான வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் கொலையாளி குஜராத்தில் பிடிபட்டார்.

திருவள்ளூர்

மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குஜராத் மாநிலத்தை சேர்ந்த லிட்டன்குமார் (வயது 42) மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபுலா மொகந்தி (50) ஆகியோர் தங்கி வேலை செய்து வந்தனர். இதற்கிடையே திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் லிட்டன்குமாரை கொலை செய்துவிட்டு பாபுலா மொகந்தி தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

இதனை அடுத்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கடந்து 8 ஆண்டுகளாக தேடி வந்தனர். இந்நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து தனிப்படை போலீசார் குஜராத் மாநிலம் சென்று விசாரித்த போது, பாபுலால் மெகந்தி பதுங்கி இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து அழைத்து வந்த மீஞ்சூர் போலீசார், பொன்னேரி குற்றவியல் நடுவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story