பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பெற்ற மகள் உள்பட 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பெற்ற மகள் உள்பட 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கூலி தொழிலாளி
ஆரணி அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கடந்த 2018-ம் ஆண்டு அவரது 12 வயதுக்குட்பட்ட மகளை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனால் அச்சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அச்சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு வந்த அவரது தந்தை சிறுமியிடம் மீண்டும் தகாத முறையில் நடக்க முயன்று உள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து அவரது அவரது தாயிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுமியின் தாய்க்கு அவரது கணவர் 12 வயதுக்கு உட்பட்ட உறவுகார சிறுமி ஒருவரையும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து அச்சிறுமியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு கூலி தொழிலாளியை கைது செய்தனர். மேலும் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.
அதில் பெற்ற மகள் மற்றும் உறவுகார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு தரப்பில் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார்.