லாரி மோதி ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் பலி

அவினாசியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லாரி ேமாதல்
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த நாதம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடயை மகள் ரம்யா (வயது 21). இவர் அவினாசியில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ரம்யா, ஸ்கூட்டரில் நாதம்பாளையத்திலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தார். அவினாசி மெயின் ரோடு சீனிவாசபுரம் அருகே வந்தபோது அவருக்கு பின்னால் வேகமாக வந்த லாரி ஸ்கூட்டரின் பக்கவாட்டில் மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று ஓடியது.
லாரி மோதி ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் பலி
இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரம்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜா என்பவரின் மகன் ரமேசை (24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






