பென்னாகரத்தில்முள்ளுவாடி ஏரி புனரமைப்பு பணியை தடுத்த பொதுமக்களால் பரபரப்பு


பென்னாகரத்தில்முள்ளுவாடி ஏரி புனரமைப்பு பணியை தடுத்த பொதுமக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 April 2023 12:30 AM IST (Updated: 12 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் பேரூராட்சி 12-வது வார்டு முள்ளுவாடி பகுதியில் முள்ளுவாடி ஏரி உள்ளது. இந்த ஏரியில் தற்போது குப்பைகள், கழிவுநீர் கலந்தும், சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு நிறைந்தும் பராமரிப்பின்றி காணப்பட்டது. இதனை தொடர்ந்து ஏரியை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.

இந்த நிலையில் ஏரியில் உள்ள கழிவுநீரை வெளியேற்ற ஏரியின் கரையை உடைத்ததாக தெரிகிறது. இதனால் கழிவுநீர் விவசாய நிலங்களில் புகுந்து விவசாயம் பாதிப்படைந்தது. இதன் காரணமாக விவசாயிகள் ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையான கால்வாய் வசதி செய்த பின்னரே ஏரியை சீரமைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி நேற்று வேலை நடைபெறும் இடத்தை பொ முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story