நாள் முழுவதும் உல்லாசத்திற்கு ரூ.11,000 ஏமாத்திட்டாங்க சார்...! சிக்கிய பேராசிரியரின் புலம்பல்


நாள் முழுவதும் உல்லாசத்திற்கு ரூ.11,000 ஏமாத்திட்டாங்க சார்...! சிக்கிய பேராசிரியரின் புலம்பல்
x
தினத்தந்தி 30 Aug 2022 9:49 AM GMT (Updated: 30 Aug 2022 9:57 AM GMT)

பாலியல் தொழிலாளியை வற்புறுத்திய உதவிப் பேராசிரியரை போலீசில் சிக்கவைத்த பெண்

சென்னை

சென்னை வேளச்சேரி தரமணி 100 அடி சாலை சீத்தாபதி நகரில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் இருந்து காவலன் செயலி மூலம் பெண்கள் ஆபத்தில் சிக்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் பரிமாறியுள்ளனர். இந்த தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றதும் உடனே வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த இரு பெண்களையும், அதே அறையில் இருந்த இரு ஆண்களையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். நான்கு பேரிடமும் வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதில் ஒருவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரியும் 41-வயதான உதவி பேராசிரியர் என்பதும், அவர் தனது நண்பரோடு சேர்ந்து ஆப் ஒன்றின் மூலம் பெண்களுடன் உல்லாசமாக இருக்க புரோக்கர் வாயிலாக இரண்டு பெண்களை புக் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பின்னர், புரோக்கர் கோயம்பேடு வருமாறு கூறியதைத் தொடர்ந்து அங்கு காரில் சென்று

இரண்டு பெண்களை வேளச்சேரி அழைத்துச் சென்றுள்ளனர்.

ஒரு பெண்ணுக்கு 11000 ரூபாய் வீதம் இரு பெண்களுக்கும் 22000 ரூபாயை பெற்றுக் கொண்டு தனித் தனி அறைக்குச் சென்றுள்ளனர். அப்போது, இரண்டாவது முறை உறவிற்கு அழைத்தபோது பெண்கள் வரமறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்போது, உதவிப் பேராசிரியர் வலுக்கட்டாயமாக பலவந்தப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சத்தம் போட்டு கத்திய பெண், கழிவறைக்குச் சென்று காவலன் செயலி மூலம் தாங்கள் ஆபத்தில் சிக்கியிருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார் அவர்களை மீட்டுள்ளனர்.

இதுகுறித்து உதவிப் பேராசிரியரிடம் விசாரணை மேற்கொண்டதில், தான் அப்பாவித்தனமாக இருந்து நம்பி ஏமாந்துட்டேன் சார். ஒருநாள் முழுவதற்கும் எனக் கூறி 11,000 ரூபாய் வாங்கிக் கொண்டு ஒருமுறைதான் உறவு வைக்க வேண்டும் என பெண்கள் ஏமாற்றுவதாக புலம்பியதாக போலீசார் கூறினர்.

இதுதொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு பெண்களையும் மயிலாப்பூர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து உதவிப் பேராசிரியருக்கு அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் உதவி பேராசிரியர் ஒழுக்கம் தவறி போலீசாரிடம் சிக்கிய சம்பவம் ஒட்டுமொத்த பேராசிரியர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.


Next Story