மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ஆலங்குளம் அருகே மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் புஷ்பாஞ்சலியை தொடர்ந்து உலக அமைதி வேண்டியும், மழை வேண்டியும் 2,502 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று இரவு மாக்காப்பு பூஜை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 6 மணிக்கு முடி காணிக்கை நேமிதம், 9 மணிக்கு பால்குடம், தீச்சட்டி நேமிதம், 10 மணிக்கு கண்மலர், பட்டு நேமிதம், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, 1 மணிக்கு அன்னதானம், 3 மணிக்கு சின்ன சப்பரம் வீதியுலா, சிறுவர், சிறுமிகள் பங்கேற்கும் சிலம்பாட்டம், இரவு 9 மணிக்கு ஆயிரம் கண் பானை, மாவிளக்கு நேமிதம், முளைப்பாரி நேமிதம், நள்ளிரவு 12 மணிக்கு சாமபூஜை, பெரிய சப்பரம் வீதியுலா, வாண வேடிக்கை ஆகியன நடைபெறுகிறது.
நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, கும்மிப்பாட்டு, 11 மணிக்கு பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, 1 மணிக்கு குழந்தைகளின் சிறப்பு நிகழ்ச்சி ஆகியவை நடக்கின்றன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.