பொம்மிடி முதல் நிலை ஊராட்சி பகுதியில்ஆக்கிரமிப்பு புறம்போக்கு நிலத்தை மீட்க கோரிக்கை


பொம்மிடி முதல் நிலை ஊராட்சி பகுதியில்ஆக்கிரமிப்பு புறம்போக்கு நிலத்தை மீட்க கோரிக்கை
x
தினத்தந்தி 18 March 2023 12:30 AM IST (Updated: 18 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி முதல் நிலை ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இதில் கோட்டமேடு பகுதியில் உள்ள மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலத்தில் ரூ.24 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்க பூமிபூஜை செய்வதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தராம விஜயரங்கன், ஊராட்சி மன்ற தலைவர் சி.எம்.ஆர்.முருகன் உள்ளிட்டவர்கள் சென்றனர்.

அப்போது இங்கு பூஜை போடக்கூடாது என ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ள 24 ஏக்கர் மேய்ச்சல் தரை புறம்போக்கு விவசாய நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்


Next Story