ராசிபுரம் அருகே போலி ஆவணம் மூலம் பட்டா நிலம் ஆக்கிரமிப்பு-பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


ராசிபுரம் அருகே போலி ஆவணம் மூலம் பட்டா நிலம் ஆக்கிரமிப்பு-பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

ராசிபுரத்தை அடுத்த கூனவேலம்பட்டி ஊராட்சி தோனமேடு பகுதி மக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தோனமேடு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கைத்தறி தொழிலுக்கு பாவு துவைத்தலுக்காக சுமார் 8 ஆயிரம் சதுர அடி பட்டா நிலம் இருந்தது. எங்கள் முன்னோர்களை தொடர்ந்து நாங்களும், பாவு துவைத்தலுக்கு அதை பயன்படுத்தி வந்தோம். காலப்போக்கில் நாங்கள் விசைத்தறி தொழிலுக்கு மாறி இருந்தோம். தற்போது விசைத்தறி தொழில் அழிந்து வருவதால் ஆடை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நாங்கள் மீண்டும் கைத்தறி தொழிலுக்கு மாறி வருகிறோம்.

இதனிடையே எங்களின் பாவடி இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து, போலி ஆவணம் மூலம் பட்டா பெற்று உள்ளனர். அதனால் நாங்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட பட்டாவை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்குள்ள கட்டிடங்களை அகற்றி நாங்கள் மீண்டும் பாவு துவைத்தல் செய்து கைத்தறி தொழிலில் ஈடுபட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story