ரூ.33 லட்சத்தில் தரைப்பாலம்


ரூ.33 லட்சத்தில் தரைப்பாலம்
x

புலிவலம் கிராமத்தில் ரூ.33 லட்சத்தில் தரைப்பாலம் அமைக்கும் பணியை முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தில் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.33 லட்சம் மதிப்பில் தரைப்பாலம் அமைக்க பூமி பூஜை நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருமால் தலைமை தாங்கினார். இதில் சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தரைப்பாலம் கட்டுமான பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அப்போது கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், கட்டுமான பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர் நதியா மதன்குமார், ஒப்பந்ததாரர் நரசிம்மன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story