கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போட்டு நிலம் மோசடி

தேங்காப்பட்டணம் அருகே கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போலியாக போட்டு நிலம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கடை,
தேங்காப்பட்டணம் அருகே கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போலியாக போட்டு நிலம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிலம் மோசடி
தேங்காப்பட்டணம் அருகே உள்ள கீழ்குளம் வாழவிளையை சேர்ந்தவர் மரிய ரத்தின பாய். இவருக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த லாரன்ஸ், லைசா மேரி ஆகிேயார் அபகரிக்கும் நோக்கத்தில் அனுபவ சான்றிதழ் தயார் செய்துள்ளனர். இதற்காக கீழ்குளம் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலக முத்திரையை போலியாக தயார் செய்து அலுவலரின் கையெழுத்தும் போட்டு சான்றிதழ் தயாரித்துள்ளனர்.
பின்னர் அந்த சான்றிதழை பயன்படுத்தி ஜனவரி மாதம் 29-ந்் தேதி முன்சிறை சார்-பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தை தங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
சப்-கலெக்டர் விசாரணை
இதுகுறித்து மரியரத்தின பாய் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். அவர் நடத்திய விசாரணையில் கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போலியாக போட்டு பத்திரப்பதிவு செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் லாரன்ஸ், லைசா மேரி ஆகிேயார் மீது சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்தார். இந்த மோசடி குறித்து இன்ஸ்பெக்டர் யேசு ராஜசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.