நிலஅளவை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நிலஅளவை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:30 PM GMT (Updated: 2023-01-25T01:01:04+05:30)
நாமக்கல்

நில அளவையர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கவன ஈரப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கள பணியாளர்களின் பணி சுமையை குறைத்திட வேண்டும். இயக்ககத்தால் நிறுத்தப்பட்டு உள்ள வரையறுக்கப்பட்ட பயண படியை உடனடியாக விடுவித்திட வேண்டும். புல உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story