நில அளவை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
கள்ளக்குறிச்சியில் நில அளவை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடைபெற்றது. நில அளவை கள அலுவலர்களின் பல்வேறு பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உயர் நிலை அலுவலர்கள் வரை உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நில அளவைத்துறை இயக்குனரை கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு .மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் ராஜா, கோட்ட செயலாளர் நடராஜ், திருக்கோவிலூர் கோட்ட தலைவர் முகமது ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் செந்தில் முருகன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் கோட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் சக்திவேல் முருகன், தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க மாவட்ட செயலாளர் ஆனந்த கிருஷ்ணன் உள்பட நில அளவை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.