"மொழி உடல் என்றால் இசை உயிர்" - சீமான் கருத்து


மொழி உடல் என்றால் இசை உயிர் - சீமான் கருத்து
x

இசை மற்றும் மொழி இரண்டுமே ஒன்றுதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது இளையராஜா, வைரமுத்து விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கருத்து கூறியதாவது;

"இளையராஜாவும், வைரமுத்துவும் என் தகப்பன்கள். ஒரு படைப்பாளியாக இளையராஜாவுக்கு ஒரு அங்கீகாரம் தேவை. இசை, பாடல் வரிகள் இரண்டுமே முக்கியம் தான். அவற்றைப் பிரித்து பார்க்கக் கூடாது. இளையராஜா உரிமையைத்தான் கேட்கிறார். மற்றவர்களுக்கு உரிமையை தரக்கூடாதென கூறவில்லை. இளையராஜா, வைரமுத்து பிரச்னை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைதான். படத்தை ஒருமுறை வாங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் உரிமத்தை வைத்துக்கொள்வது சரியல்ல." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story