வரலட்சுமி நோன்பை முன்னிட்டுவரதராஜ பெருமாள் கோவிலில் விளக்கு பூஜை


வரலட்சுமி நோன்பை முன்னிட்டுவரதராஜ பெருமாள் கோவிலில் விளக்கு பூஜை
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.

விழுப்புரம்


இந்துக்களின் விரதங்களில் ஒன்றான வரலட்சுமி நோன்பு விரதம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. தங்களுடைய குடும்பம் செழித்தோங்க வேண்டும், கணவர், பிள்ளைகள் அனைவரும் ஆயுள், நீங்கா செல்வம், சவுகர்யம் அனைத்தும் பெற்று இன்புற்று வாழ மகாலட்சுமியை வேண்டி பெண்கள் விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

அதன்படி வரலட்சுமி நோன்பை முன்னிட்டு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி செங்கமலத்தாயார் கோவிலில் கலசங்கள் வைத்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மலர்கள், மஞ்சள், குங்குமம், அட்சதை ஆகியவற்றை கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் சாமிக்கு நடந்த மகா தீபாராதனையில் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story