லாரி மோதி மெக்கானிக் பலி


லாரி மோதி மெக்கானிக் பலி
x

லாரி மோதி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40). மெக்கானிக்கான இவர் நேற்று மூலைக்கரைப்பட்டியில் இருந்து கிருஷ்ணாபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த மாரிமுத்துவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story