சைபர் கிளப் தொடக்கம்


சைபர் கிளப் தொடக்கம்
x
தினத்தந்தி 17 Sept 2023 1:00 AM IST (Updated: 17 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி

சைபர் குற்றங்கள் குறித்தும், அதில் சிக்காமல் எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் மேற்பார்வையில், சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் வழிகாட்டுதலின்படி ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சைபர் கிளப் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி குறித்து விளக்கமளித்து, மாணவர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story