பாரத தேசிய எழுத்தறிவு திட்டம் தொடக்கம்


பாரத தேசிய எழுத்தறிவு திட்டம் தொடக்கம்
x

பாரத தேசிய எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கரூர்

தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள தாந்தோணிமலைப்பட்டி, கணபதி பாளையம் பகுதிகளில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு பாரத தேசிய எழுத்தறிவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதனை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் உதவி திட்ட அலுவலர் சக்திவேல் தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், பள்ளியின் தலைமையாசிரியை இளமதி, தன்னார்வலர் விஜயலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) செல்வக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த மையங்களில் எழுத, படிக்க வந்தவர்களுக்கு பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.



Next Story