சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை


சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
x

நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி

நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று சமாதானபுரத்தில் இருந்து கோர்ட்டுக்கு பஸ்சில் சென்றார். அதே பஸ்சில் சமாதானபுரம் எம்.கே.பி. நகரை சேர்ந்த ராஜா (வயது 36) என்பவரும் பயணம் செய்தார். அப்போது சட்டக்கல்லூரி மாணவிக்கு ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story