ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் நிரப்ப வந்து பிரச்சினை செய்தால் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு


ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் நிரப்ப வந்து பிரச்சினை செய்தால் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு
x

ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் நிரப்ப வந்து பிரச்சினை செய்தால் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர்

கரூர்,

ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் மற்றும் இருக்கை பட்டை அணிவதனை கட்டாயம் கடைபிடித்தல் தொடர்பாக பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுடன் ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆரம்பகாலத்தில் ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வருபவர்களுக்கு உரிமையாளர்களான நீங்கள் பெட்ரோல் நிரப்ப மறுத்ததின் காரணமாக தாக்கம் அதிக அளவில் இருந்தது. அதன்காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டினார்கள். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. ஆகவே தான் இந்தக் கூட்டத்தின் மூலம் உங்களுக்கு நினைவூட்டல் ஏற்படுத்தப்படுகிறது.

வழக்குப்பதிவு செய்யப்படும்

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 120 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு நீங்கள் பெட்ரோல் நிரப்ப மறுக்கும்போது ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக வாட்ஸ்-அப் குழுவில் தகவல்களை நீங்கள் அனுப்பினால் அந்த தகவலின் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட இருசக்கர வாகன ஓட்டிகளின் மீது காவல் துறை சார்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உரிய நடவடிக்கை

ெஹல்மெட் அணியாமல் பெட்ரோல் நிரப்புவதற்காக பக்கத்து மாவட்ட எல்லைகளுக்கு சென்று பெட்ரோல் நிரப்பினால் அது கண்டறியப்பட்டு பக்கத்து மாவட்ட கலெக்டர்களுக்கு இந்த தகவல் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story