வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்


வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 6 July 2023 1:15 AM IST (Updated: 6 July 2023 4:44 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் வக்கீல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை போல் தமிழ்நாட்டிலும் சட்டமன்றத்தில், வக்கீல்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். வக்கீல்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேமநலநிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டுக்குழுவின் தலைவர் நந்தகோபால் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் எடுத்த ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பை நிபந்தனையின்றி கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தேனி வக்கீல் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள், மூத்த வக்கீல்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். காலை 10 மணியளவில் தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணியளவில் நிறைவு பெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வக்கீல்கள் கலந்துகொண்டனர்.


Next Story