திருவண்ணாமலையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்


திருவண்ணாமலையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
x

திருவண்ணாமலையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், ஜாக் அமைப்பின் தலைவரின் மீது தமிழக பார் கவுன்சில் மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஷேமநலநிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தி அரசு அறிவிக்க வேண்டும் என்றும் இவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் திருவண்ணாமலை பார் சங்கம், அட்வகேட் சங்கம், லாயர் சங்கம் ஆகியவற்றை ேசர்்ந்த நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



Next Story