வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூரில் வக்கீல் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள திருக்கோவிலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல் சங்கத்தின் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட பெயர் திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் துணை தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். திருக்கோவிலூர் வக்கீல் சங்க செயலாளர் சுவிஜி.சரவண்ணக்குமார் முன்னிலை வகித்தார். பொறுப்பு தலைவர் எஸ்.கே.ராஜ்குமார் வரவேற்று பேசினார். மூத்த வக்கீல் வீரா.செல்வராஜ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் .ராஜேஷ், வீரசந்திரன், தில்லைநடராஜன், சுந்தர்ராஜ், வெங்கடேசன் உள்ளிட்ட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் ராஜபாண்டியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story






