போலீசை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


போலீசை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

கொடைக்கானலில், போலீசை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் ஆனந்தகிரி 4-வது தெருவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உள்ளது. கடந்த மாதம் 23-ந்தேதி, இந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு அறை கண்ணாடியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதனையடுத்து போலீசாரை கண்டித்தும், குற்றவாளியை கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டியும் கொடைக்கானல் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாளைக்குள் (புதன்கிழமை) நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.


Next Story