பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
3 சட்டங்களின் பெயர் மாற்றத்தை கண்டித்து பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூர்
கோவை
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்து மசோதா தாக்கல் செய்துள்ளது. இதை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும், கீழமை கோர்ட்டுகளில் இ-பைலிங் முறையை கட்டாயப்படுத்தக்கூடாது என கோரியும் கோவை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட வக்கீல்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். வக்கீல்கள் போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் இந்த வாரம் முழுவதும் கோர்ட்டு பணியை புறக்கணிப்பதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story