நெய்வேலி, விருத்தாசலத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நெய்வேலி, விருத்தாசலத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெய்வேலி,
மணிப்பூரில் 2 பெண்களுக்கு நடந்த வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நெய்வேலி நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும், மேற்கண்ட சம்பவத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர்.
இதேபோல், விருத்தாசலம் நீதிமன்றம் முன்பும் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு வக்கீல் அசோசியேசன் சங்க தலைவர் காசி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன், வக்கீல்கள் அம்பேத்கர், விஜயகுமார், அருள்குமார், பட்டி முருகன், சரவணன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள் மணிகண்ட ராஜன், தன்ராஜ், தீபன், மோகன்ராஜ், செல்வி, ஜென்னி, ஜெயஸ்ரீ, காயத்ரி, ராஜகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.