விவசாய நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்


விவசாய நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்
x

விவசாய நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கல்வராயன்மலையில் உள்ள மணியார்பாளையம், கர்ணாம்பட்டு, மேலத்துக்குழி, கீழத்துக்குழி, ஈச்சங்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வன நிர்ணய அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த வனநிர்ணய அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாங்கள் கல்வராயன்மலையில் காலங்காலமாக வசித்து வருகிறோம். நாங்கள் விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு இது வரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம். இதை தவிர்க்க நாங்கள் விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். அது வரை கல்வராயன்மலையை காப்புக்காடாக மாற்றுவதை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர். மனுவை பெற்ற வனநிர்ணய அலுவலர், கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story