தோல் வியாபாரி கடத்தல்


தோல் வியாபாரி கடத்தல்
x

பேரணாம்பட்டில் தோல் வியாபாரியை கடத்திய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டில் தோல் வியாபாரியை கடத்திய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

தோல் வியாபாரி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் ரஹமானியா தெருவைச் சேர்ந்த நதீம் அஹம்மத் (வயது 28), தோல் வியாபாரி.

பேரணாம்பட்டு பகுதியில் ஹவாலா பண பரிவர்த்தனை கோடிக்கணக்கில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நதீம் அஹம்மத் பேரணாம்பட்டு டவுன் முஹம்மதலி தெருவை அஸ்வாக் மற்றும் வசீம் ஆகியோரிடம் சேர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹவாலா பணபரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அஸ்வாக், வசீம் ஆகியோரிடம் ரூ.73 லட்சத்ைத நதீம் அஹம்மத் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் பணத்தை திருப்பி கொடுக்குமாறு நதீம் அஹம்மதிடம் அஸ்வாக், வசீம் ஆகியோர் கேட்டனர். ஆனால் நதீம்அஹம்மதிடம் பணம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி முடியவில்லை. இந்தநிலையில் நதீம் அஹம்மத் திடீரென தலைமறைவானார்.

இதனால் அஸ்வாக், வசீம் ஆகியோர் நதீம் அஹம்மத்தின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ருபினாவிடம் நதீம் அஹம்மத் எங்கு சென்றார் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

கடத்தல்

நதீம் அஹம்மத் பேரணாம்பட்டு டவுன் திரு.வி.க. நகரிலுள்ள தனது நண்பர் ரியாஸ்அஹம்மத் என்பவர் வீட்டில் தங்கியிருந்ததை அறிந்த அஸ்வாக், வசீம் ஆகியோர் பேரணாம்பட்டு தெருவைச் சேர்ந்த ரயீஸ்அஹம்மத் (38) தலைமையிலான கட்டப் பஞ்சாயத்து கும்பலிடம் அணுகி நதீம் அஹம்மத் பணம் தராமல் ஏமாற்றியதை கூறினர்.

உடனடியாக நேற்று ரயீஸ்அஹம்மத் தனது கூட்டாளிகளான ரியாஸ் அஹம்மத், ஷாரிக் மற்றும் அஸ்வாக், வசீம் ஆகியோருடன் சென்று நதீம் அஹம்மதை கடத்தி சென்றனர்.

நதீம் அஹம்மத் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கொண்டம்பல்லி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறம் அமைந்துள்ள ரயீஸ் அஹம்மதின் தோப்பிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

ஒருவர் கைது

அங்கு நதீம் அஹம்மதை கட்டி வைத்து பணம் கேட்டு மிரட்டி தாக்கி கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டவுடன் கட்ட பஞ்சாயத்து கும்பல் தப்பி ஓடிவிட்டது. ரயீஸ் அஹம்மத் போலீசிடம் சிக்கினார்.

போலீசார் ரயீஸ் அஹம்மதிடம் நடத்திய விசாரணையில் பணம் கடன் வாங்கியவர்களிடம் மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

இதுசம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயீஸ் அஹம்மதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவான அஸ்வாக், வசீம், ரியாஸ் அஹம்மத், ஷாரிக் மற்றும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story