சட்ட விழிப்புணர்வு முகாம்
சிவகிரி அருகே சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரி அருகே தலையணை பகுதியில் மலை வாழ் குடியிருப்பு காலணி குடியிருப்பு பகுதியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் தலைமை தாங்கினார். சிவகிரி வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் நீதிபதி ஜெய காளீஸ்வரி முன்னிலை வகித்தார். வக்கீல் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். சிவகிரி வக்கீல் சங்க பொருளாளர் செந்தில்குமார் கருத்துரை வழங்கினார்.
முகாமில் இலவச சட்ட உதவி ஆணைக் குழுவின் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நெல்லை உதவி வனப்பாதுகாவலர் ஷாநவாஸ்கான், புளியங்குடி வனச்சரக அலுவலர் சிக்கந்தர் பாஷா, சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா, வனவர்கள் மகேந்திரன், அசோக்குமார், வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகர் ரவிச்சந்திரன், குடிமைப் பொருள் வழங்கல் அலுவலர் கடையநல்லூர் சிவப்பிரகாசம், வாசுதேவநல்லூர் வருவாய் ஆய்வாளர் ராசாத்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முக லட்சுமி, சண்முகசுந்தரம் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.