சட்ட விழிப்புணர்வு கண்காட்சி


சட்ட விழிப்புணர்வு கண்காட்சி
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் சட்ட விழிப்புணர்வு கண்காட்சி

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சட்ட விழிப்புணர்வு நாள் கண்காட்சி தொடங்கியது. இதை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, கலெக்டர் மோகன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, வருவாய் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் நீதிபதிகள் முன்னிலை வகித்தனர். இக்கண்காட்சியில் பொதுமக்களுக்கு சட்டம் சார்ந்த உரிமைகள், தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கான புகைப்பட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதை அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் பார்வையிட்டனர். அப்போது பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

1 More update

Related Tags :
Next Story