கறவை மாடு வாங்க கடன் வழங்கும் முகாம்


கறவை மாடு வாங்க கடன் வழங்கும் முகாம்
x

அம்பையில் கறவை மாடு வாங்க கடன் வழங்கும் முகாம் நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை ஊர்க்காடு பகுதியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், மானியத்துடன் கறவை மாடு வாங்குவதற்கான கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. ஊர்க்காடு, கீழ காலனி முப்புடாதி அம்மன் கோவில் முன்பு நடைபெற்ற முகாமுக்கு நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கிராம வங்கி முதுநிலை மேலாளர் கவிதா, கால்நடை மருத்துவர் சிவமுத்து, தமிழ்நாடு கிராம வங்கி முதுநிலை மேலாளர் (ஓய்வு) அசரப் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாட்கோ துணை கலெக்டர் அய்யப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 பயனாளிகளுக்கு கடன் வழங்கினார்.


Next Story