வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் விளையாடிய சிறுத்தைகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்


வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் விளையாடிய சிறுத்தைகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
x

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தைகள் விளையாடின. இது சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே உள்ள சவரங்காடு எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர். அப்போது அந்த தோட்டத்தில் 2் சிறுத்தைகள் ஒன்றோடு ஒன்று விளையாடிக் கொண்டு இருந்தன. இதனை கவனித்த தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் சக தொழிலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் தொழிலாளர்கள் அங்கு சென்றனர். இதனை கவனித்த சிறுத்தைகள் அங்கிருந்து தானாகவே வனப்பகுதிக்கு சென்றுவிட்டன. சிறுத்தைகள் விளையாடிய காட்சி அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பகல் நேரத்திலேயே சிறுத்தைகள் தேயிலை தோட்ட பகுதியில் நடமாடி வருவது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story